அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ! அருகில் அத்திவரதர் !,

உங்களோடு ஒரு வார்த்தை உரத்த சிந்தனை புகார் பெட்டி

nayan athivarathar - 2026அத்திவரதரை  தரிசிக்க சென்றார் நயன்தாரா  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அங்கு கூட்டம் அதிகமாக அலைமோதுகிறது.

முதல்வர், ரஜினி குடும்பத்தினர், தி.மு.க குடும்பத்தினர் பல நடிகர்கள், ரவுடி,அரசியல் பிரபலங்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேற்று அத்திவரதரை தரிசித்தார்.

இந்நிலையில் அத்திவரதரை நயன்தாரா தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், அத்திவரதர் சிலை முன்பு நயன்தாரா நிற்கிறார். அர்ச்சகர்கள் அனைவரும் நயன்தாராவை பார்த்தபடி  இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். அதில் உள்ள ஒரு கருத்துதான் இது…

அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ! அருகில் அத்திவரதர் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.