
“இனி சத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. காமராஜர் சிலையை தொட்டோம்.. நாங்க சுத்தமாயிட்டோட்ம” என்று போதை மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 8 பேரை நிர்வாகம் படிப்பதற்கு உள்ளே அனுமதிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட அந்த 8மாணவா்களும் சம்பவதன்று தங்களது நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு மது விருந்து வைத்து குடித்து விட்டு தலைக்கேறிய மதுபோதையில், வகுப்பறைக்கு சென்றுள்ளனா்.
இதனால் கல்லுாரி நிர்வாகம் அந்த மாணவா்களின் இந்த செயலை கண்டித்ததடன் 8பேருக்கும் டி.சி. கொடுத்துவிட்டு, வேறு கல்லுாரியில் சோ்ந்து படிப்பை தொடரும்படி நிர்வாகம் அறிவுறித்தி உள்ளது.
கல்லுாரி நிர்வாகத்தின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், “நாங்கள் கட்டணம் கட்டியே படிக்கிறோம், எங்களை அதே கல்லுாரில்தான் படிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என மதுரை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.
அதனால், சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த வீட்டினை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த நூதன உத்தரவை அனைத்து தரப்பினரும் பாராட்டவே செய்தனர்.
இதையடுத்து நேற்று, அந்த 8 மாணவர்களும் விருதுநகரிலுள்ள காமராஜர் இல்லத்துக்கு சென்றனர்.
பின்னா் அங்குள்ள அறைகளை சுத்தம் செய்தனர். அங்கிருந்த காமராஜர் சிலைகளை சுத்தம் செய்தவாறும் சுறுசுறுப்பாக இருந்தனர்.
நாள் முழுக்க இவர்கள் சுத்தம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டதுடன், அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் உதவிகளை செய்தனர்.
மாலையில் சுத்தப்படுத்தும் வேலைகளை முடித்த மாணவர்கள் கூறியதாவது “நீதிமன்றம் எங்களுக்கு அளித்துள்ள உத்தரவை தண்டைனையாக நாங்கள் பார்க்கவில்லை.. எங்களை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக நினைத்துள்ளோம்.
காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்தபோதே எங்கள் மனசும் சுத்தமாகிவிட்டது. அதுவும் காமராஜர் சிலையை தொட்டு துடைச்சபோதே உடல் சிலிர்த்துவிட்டது.
இது எங்கள் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. சத்தியமாக இனி குடிக்க மாட்டோம்” மற்றும் எங்களுடன் படித்து வரும் மற்ற மாணவா்களையும் மது குடிக்கும் பழக்கத்திலிருந்து விலகி வர எங்களால் ஆன உதவிகளை செய்வோம்.
மேலும் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பிரச்சாரங்களை மேற்கொள்வோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து மகிழ்ச்சியை தெரியப்படுத்தி வருகின்றனா்.



