அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.? பரமபிதாவே அறிவார்.

Published:

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”

பரமபிதாவே அறிவார்.
(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)

ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140 தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்61756834 2517068251854066 7432222991972302848 n 2 - 2026

கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்தரிசனத்துக்கு வந்தாள்.

“என் மவனுக்குப் பேர் வைக்கணும்”என்று பெரியவாளிடம் பணிவாக தெரிவித்தாள்.

அழகான தமிழில்,சுந்தரமான சிவனுடையபெயர்களில் ஒன்றைக் கூறுவார்கள்,பெரியவா என்பது அருகிலிருந்த அடியார்களின் எதிர்பார்ப்பு.

“சதானந்தம்-னு பேர் வை”-பெரியவாள்.

இது பொதுப் பெயராக இருக்கிறதே? எந்த ஒரு தெய்வத்தையும் சுட்டிக்காட்டுவதாகஇல்லையே? என்று அடியார்களுக்கு மன நெருடல்.

பின்னர் தெரியவந்தது.- அந்தப் பெண்மணிz கிறிஸ்துவ மதத்தை தழுவியர் என்று. அதனால்தான்,அந்தத் தாயாரின் மனத்தில் நெருடல் ஏற்படாத வகையில்,ஒரு பொதுப் பெயரைக் கூறினார்கள் போலும்!

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?
பரமபிதாவே அறிவார்.

Related articles

Recent articles

spot_img