பிப்ரவரி 25, 2021, 12:04 காலை வியாழக்கிழமை
More

  திருவோணத் திருநாள்!

  Home இலக்கியம் கவிதைகள் திருவோணத் திருநாள்!

  திருவோணத் திருநாள்!

  onam 1
  onam 1

  அ(ஸ்)த்தம்முதல் ஓணம்வரை
  பேணும் திருநாள் !- பலி
  தைய்த்யராஜ் பூமிவரும்
  ஓணத்திருநாள்!! 01

  பிரகலாதன் பேரன்தன்
  பூமித் திருநாள்! – ஆஹ்
  திருபாதாளம் விட்டுநமை
  ஆமித் திருநாள்!! 02

  மூவுலகை ஆண்டபலி
  ஞாபகத் திருநாள்!-மண
  பூவகைகள் வழிகிடத்தி
  ஏகிடு திருநாள்!! 03

  வாமணன்தான் யாசகனாய்
  வந்திட்ட திருநாள்!.-பலி.
  தாமுவந்து மூன்றடிமண்
  தந்திட்ட திருநாள்!! 04

  நின்றகுறள் நெடிதுயர்ந்து
  வளர்ந்திட்ட திருநாள்! ‌-அது
  குன்றாமல் மண், விண்ணை
  அளந்திட்ட திருநாள்!! 05

  மிச்சமுள்ள ஓரடிக்கு
  இடம் கேட்கையில்- தலை.
  உச்சிதந்து சரண்புகுந்த
  பீடுடை திருநாள்.!! 06

  அமராவதி இந்திரர்க்கே
  திருப்பிய திருநாள்!- பொது.
  நிமித்தம்பலி பாதாளம்
  இருத்திய திருநாள்!! 07

  வருடமோர் நாள்மண்ணில்
  உலவிடு திருநாள்!- பலி
  அருமைமக்கள் இல்லமேகி
  அருளிடு திருநாள்!! 08

  உணவுவகை நூறுகொண்டு
  படைத்திடு திருநாள்!-கவின்
  ஆணையோட்டம் நடனம்பாட்டில்
  களித்திடு திருநாள்!! 09

  மாநிலத்தார் கொண்டாடும்
  சமத்துவ திருநாள்!- ஓணம்.
  பூநிலத்தோர் மாபலியை
  புகழ்ந்திடு திருநாள்!! 10

  விந்த்யாவளி மேன்மைகுணம்
  புகட்டிடு திருநாள்!-அது
  சுந்தரமண் கேரளத்து
  திருவோண திருநாள்!! 11

  • கவிஞர்… கண்ணன் திருமலை அய்யங்கார்.

  அஜினி. நாக்பூர், மஹாராஷ்டிரம்

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari