
மாமனும் மாட்டுக்கோன் மைத்துனனும் மாட்டுக்கோன்
மாமனும் ஆட்டுக்கோன் மைத்துனனும் ஆட்டுக்கோன்
மாமனும் மைத்துனனும் மாமதுரை நாட்டுக்கோன்
மாமனும் மைத்துனனும் நம்மையாளும் வீட்டுக்கோன்.
மாமனோ நீர்ச்சடையான் மைத்துனனோ நீருடையான்
மாமனோ கார்கழுத்தான் மைத்துனனோ கார்நிறத்தான்
மாமனோ பெண்பாதி மைத்துனனோ பெஞ்சாதி
மாமனும் மைத்துனனும் நம்பினோர்க்கு நல்லகதி.
மாமனும் சங்கெடுத்தான் மைத்துனனும் சங்கெடுத்தான்
மாமனோ சங்கரத்தான் மைத்துனனோ சக்கரத்தான்
மாமனும் வேதநாதன் மைத்துனனும் வேதநாதன்
மாமனோ மைத்துனனோ மாறுபாடு இல்லைதானே!
– பத்மன்