
- கண்ணன் திருமலை அய்யங்கார், அஜ்னி, நாக்பூர்
‘போதையிலா தமிழகம்நம்’ சபதமேற்றார்;
பொன்னான நாளினிமேல் வாய்க்கும்நன்கு!
காதிற்கு தேன்பாயும் செய்தியெனினும்
காட்டுகிறேன் போதைவகை மேலும்பலவாம்!!
மதிமாய்க்கும் விழிசாய்க்கும் லாகிரிவஸ்து
மட்டுமன்று போதைப்பொருள்; மேலுங்கேளீர்:
கதிதாழ்த்தும் ‘கையூட்டும்’ , கபட்டுஉள்ள
கலப்படமும், ‘குறையளவும்’ போதைதானே!!
பிறர்நிலத்தை அபகரித்தல், பின்னே தூற்றல்,
பலர்கூடி பெண்மைநிறை சேதஞ்செய்தல்,
உறவுநின்ற மேன்மைவிலகி துரோகஞ்செய்தல்,
உண்டவீட்டின் படியிறங்கி பழித்துபேசல்,
ஓட்டுக்காய் முகம்மாற்றி நடந்துகொள்ளல்,
ஒட்டாமல் சோதரர்போல் நடித்துநில்லள்,
‘கூட்டஞ்சுற்றும்’ பிணைமாடாய் வஞ்சம்சுற்றி
கொள்கையுயர் வானவரை கேலிப்பேசல்;
தர்மத்தின் பயம்விட்டு தெய்வம்ஏசி
தினமுமொரு கொள்கைமாறி தன்புகழ்பாடல்,
கர்மத்தின் அடிபட்டும் முகத்திரைமூடி
கானல்நீர் வாழ்வுகொளல் யாதூம்போதை!
வகைவகையாய் போதையிங்கு ஆயிரமுண்டு!
வெட்கமிலார்! சந்தர்ப்ப வாதிகள்தானே!!!
நகைப்பேதான் மிஞ்சுமிங்கு! நாளும்போதை!
நாட்பட்ட விஷயமிது! தெளிந்தால் சரி!!