
மனிதத்தை சுவாசிக்கும் எளியவன்நீ!- விளை
மண்விரும்பு நல்லோரின் மன்னவன்நீ!!- கமழ்
புனிதத்தை சூடீநிற்கும் எம்மான்நீ!- புவி
புகழெல்லாம் புகல்கொள்ளும் பெம்மான்நீ!! 01
நாழிதோறும் நாட்டுமக்கள் உயர்வென்னி,- அலை
ஆழியென்ன விழித்திருந்து ‘செயல்’பண்ணி
‘மோழை’பகை வேரறுத்து ஜெயங்கூட்டி- சுகம்
வாழியெம்கை வாழ்விக்கும் தலைவன்நீ!! 02
வெறுக்கின்ற கூட்டங்கள் வெறுக்கட்டும்- பழி
விளிக்கின்ற கும்பல்கள் விளிக்கட்டும்.
சிறுதீபம் குகையிருட்டை ஒழிப்பதுபோல்- உன்
சீராட்சி, அவர்சரிவை விளைத்ததுவே!! 03
அச்சுறுத்தும் ‘தொற்’றுலகை மிரட்டிற்று;- அன்று
அனைவர்க்கும் மனதைர்யம் அளித்திட்டாய்.
நச்சென்று மருந்தளித்து ஜகங்காத்தாய்.- உச்சி
நின்றிட்டாய்! சனாதனம் உயர்த்திட்டாய்!! 04
அமராவதி வடிவமைத்த தேவதச்சன்-சுடர்
ஆழி, சூலம் வஜ்ராயுதம் செய்தலன்ன- தேச
‘நிமிராநிலை’ மாற்றவந்த விஷ்வகர்மன்- நின்
நாட்டுபற்று தேசபக்தி உயர்ந்தநிலை!! 05
உந்தனுக்கு எந்நாளும் சிறந்தநாள்; மோடி
உன்னாளில் விஷ்வகர்மன் பிறந்தநாள்:
எந்தவோர் நல்லவனும் சொல்லுவான் – மோடி
உனக்கேதான் பெரும்வெற்றி! தொடர்வெற்றி!! 06.
- கவிஞர் கண்ணன் திருமலை யங்கார், அஜினி, நாக்பூர்.