நானும் நீயுமாய் நாள்பொழுதும் வானின் நிலவாய் வாழ்ந்திருந்தோம் வளர்ந்து தேய்ந்தது வான்நிலவு வளராது தோய்ந்தது என்காதல்! நற்பயன் செய்ததன் விளைவோ கற்பனை சுகமாய்என் வாழ்க்கை சலிப்பின் உச்சமும் தொட்டமனம் விழிப்பின் விதையை விரும்பியது ஞானம் தேடியே நானலைந்தேன் ஊனம் நாடியில் புகுந்ததனால்! மெய்ஞானம் தேடலிலே மூழ்கியது என்ஞானம் இதயத்தில் முழுகியது நீறில்லா நெற்றி பாழ் மெய்ஞானம் உரக்கக் கூவியது நீயில்லா நெஞ்சம் பாழ் என்ஞானம் சோர்ந்தே புலம்பியது பாழ் அடைந்த நெற்றியிலே பரமன் வசிப்ப தில்லை! பாழ் பட்ட நெஞ்சினிலோ பாவை இருப்ப தில்லை! அந்தோ..! என்ஞானம் உறங்கும் நாளில் மெய்ஞானம் விழித்துக் கொள்ளும்!
மெய்ஞானத் தேடலில்…
Popular Categories




