எச்சரிக்கைச் செய்தி.. மெதுவாய்த்தான் எட்டியது! புயல் என வந்தாள் கொடி இடையாள்.. மனத்தில் சேதாரம் அதிகம்தான்! வலுவிழந்து வாசல் கடந்தாள்… வசமிழந்து பின்னே போனேன்… அன்பு மழையை எதிர்நோக்க… வசவுத் தூறல் துளைத்தது உடலை! சில்லென்ற காற்றாய் சிரிப்பு! கன்னக்குழியென உள்ளத்தில் பள்ளம்! மூடாக்காய் இருந்தது வானம்~ என் மனத்தில் அவள் நினைவாய்! காற்றில் கலைந்த மேகக் கூட்டம் சிலநேரம் கடந்துபோகும் என்னை! கவனம் கலைக்கும் முகத்தின் தோற்றம் சிலநேரம் கலைந்துபோகும் எண்ணம்! வானம் தெளிவாக சில நாளாகுமாம்! அடுத்த புயல் அறிவிப்பை எதிர்நோக்கி!
புயல் எச்சரிக்கையை எதிர்நோக்கி!
Popular Categories




