எதிலும் நேர் வழி என் வழி! வாழ்வில் நான் எடுத்த தீர்மானம் அது! ஆனால்… காதலுக்கு? குறுக்குச்சால் ஓட்டும் தந்திரம் தெரியவில்லை! உன் மீதான நேசிப்பைக் கூட நேராகச் சொன்னதால் கோணலாகிப் போனது என் மீதான உன் நேசம்! நெஞ்சினில் உன் நினைவு சுமந்து நித்தமும் உன் பெயர் சுமந்து… சுமைதாங்கியாய் மாறிப் போன உள்ளம்! அதன் நீட்சியோ…? என் குலக் கருவை நீ சுமப்பாய் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.. உன் கவிக் கருவை சுமக்க வைத்து நன்றாகவே நழுவிக் கொண்டாய்.
கோணலாகிப் போன நேசம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari