உலகம் வேகமாக மாறுகிறது நாம் மட்டும் அப்படியே! உலகம் ஸ்மார்ட்டாக மாறுகிறது… பழமைவாதத்தின் புகலிடமாய் நீயும் நானும்! எத்தனை நாளுக்கு இப்படி? முடிவெடுத்தோம் ஒருநாள்! இப்போது… உன் கையிலும் என் கையிலும் ஸ்மார்ட் போன்கள்! சொல்லில் முகம் கண்டு அழகை அசைபோட்டு ரசிக்கும் நிலை போயாச்சு! செல்லில் முகம் பதித்து ரகசியமாய் முத்தம் பதித்து உன் அண்மையை உணர்தலாச்சு! நம் பிம்பங்களை நமக்குள் பகிர்ந்து கொண்டோம்! உன் முகம் என் செல்லில்! என் முகம் உன் செல்லில்! திரையில் பதித்துக் கொண்டோம்… திரை ஒளிரும் நேரும் தீர்க்கமாய் கண்களின் சந்திப்பு! முகத்தின் லட்சணங்கள் முழுதாய்ப் பரிமாற்றம்! ஆனால்.. என்ன ஆயிற்று உனக்கு? செல்லை மவுனத்தில் ஆழ்த்தி என்னை கொல்லப் பார்க்கின்றாய்? ஏனடி? உன் முகம் காண ஏங்கி ஏங்கி… எத்தனை முறை உன் புரொஃபைல் பிக்சருக்கே போவது..? உன்னிடம் பேசி என்னுயிர் தேற்ற உன்னை அழைத்தால் எடுப்பது யார்? உன் செல்லக் குரல் அழைப்பைக் கேட்க என் செல்பேசியும் ஏங்குது பார்..! எவர் கொடுத்த யோசனையோ? என் செல் அழைப்பு வந்தால் அதை செல்லாத அழைப்பாக்கு என்று?! இப்போதெல்லாம் என் அழைப்பை உன் செல்பேசி மறுக்குது பார்..! உனக்கும் எனக்கும் இடையில் மூக்கை நுழைப்பது யார்..! எத்தனை நாள் காத்திருந்தேன் உன் பெயரை உரிமையுடன் உச்சரிக்க! உரிமையை நீ தரவில்லை உறவையும் நீ பெறவில்லை! ஆனாலும்… என் செல்லப் பெண் உன் பெயர் வரும்படியாய் பாடல் வரி தேடித்தேடி… என் செல்ல போனில் உன் அழைப்புக்கான ரிங்டோனாய் வைத்திருந்தேன்! வைத்ததுதான் மிச்சம்! ஆசை தீர அதைக் கேட்கும் மகிழ்ச்சி வரவேயில்லை! ஆனால் இப்போது… அழகாய் காதல் வரியுடன் உன் பேரும் சேர்ந்தே ஒலிக்கிறது… என் இன்னொரு செல் அழைப்புக்கும் அந்தப் பாடல் ரிங்டோனை வைத்துக் கொண்டேன் ~ உன் பெயரைக் கேட்கும் ஆவலில் எனக்கு நானே அழைப்பு விடுத்துக் கொண்டு!
ரிங்டோன் ரீங்காரம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories