என்னுள்
ஆதி காலத்தை
வேத காலத்தை
காட்சிப் படுத்தியது!
நதிக்கரை நாகரிகங்கள்
தலையெடுத்த காலம்!
இயற்கையின் ரகசியத்தை
முயன்று பெற்ற முனிகள் குருமார்கள்!
வாழ்க்கைக் கல்வி கொடுத்து
அறிவின் தெளிவை
சீடனுக்கு அளித்த காலம்!
சீடனின் வளர்ச்சியில்
பொறாமைப் படாத ஆசிரியர்.
சீடனுக்காகவே தன்னைக்
கரைத்துக் கொண்ட குருமார்கள்!
சீடன் பெறும் புகழை
தானே பெற்றதாய் எண்ணிய குரு!
குரு – சீடன் உறவில்
தந்தை – மகன் உறவைக் காட்டிலும்
பிணைப்பு அதிகம்தான்!
முன்னது தியாகத்தால் விளைவது
பின்னது வெற்றுக் கடன்!
அந்த தியாகத்தின் பிரதிபலன்…
ஆசிரியரின் நலனை
தன்னுயிரினும் மேலாய் நாடும் சீடன்!
எப்போதும் உச்சரிக்கிறான்….
ஓம் ஸஹ நா வவது |
ஸஹநௌ புனக்து |
ஸஹ வீர்யம் கரவாவஹை |
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித் விஷாவஹை ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி ||
ஆசிரியர், சீடர் – நம் இருவரையும் இறைவன் காப்பாராக !
அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்க ஊக்குவிப்பாராக !
நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக !
கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும் !
எதற்காகவும் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போமாக !
ஓம் ஒலி எங்கும் நிறையட்டும்!
எங்கும் மும்முறை அமைதி நிலவட்டும்!
இப்போது…
நிகழ்காலம்
நெஞ்சில் நிழலாடுகிறது!




