23/09/2019 12:49 PM

போயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா !

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார். தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகுவதாக தீபா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து, தீபா பேரவையில் இருந்த தலைமை நிலைய நிர்வாகிகள் அதிமுகவுக்கு திரும்பியுள்ளனர். தன்னுடைய பேரவையில் உறுப்பினர்களாக இருக்கும் எல்லோரையும் அதிமுகவில் இணைத்துள்ளார். அதிமுகவில் இணையும் உறிப்பினர்ளின் பெரிய லிஸ்ட் ஒன்றை அதிமுக தலைமையிடம் கொடுக்க இருக்கிறார் தீபா.
அதிமுக அடிப்படை தொண்டராக சேர்த்துக் கொண்டாலே போதும் , எந்த பொறுப்பும் எனக்கு தேவையில்லை. முழுநேரம் கட்சி பணியாற்றும் உடல்நிலையில் நான் இல்லை, அதனாலேயே நான் என் பேரவையை கலைக்கும் முடிவை எடுத்தேன். தனக்கு கட்சியில் எந்த பதவியும் தேவையில்லை. நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசியாக இருந்தேன். இனியும் அப்படியே இருப்பேன். அதிமுகவில் தன்னுடைய பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று கூறினார். தனக்குப் பின்னர் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற அதிமுகவுடன் இணைய உள்ளேன்” என்று தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பூர்விக சொத்துக்களை சட்டப்படி மீட்டு பின்னர் ட்ரஸ்ட தொடங்கி மக்களுக்கு சேவையாற்ற திட்டம் உள்ளது. நான் இறந்த பின்னரும் இயக்கம் நூறாண்டு காலம் இருக்க வேண்டும் என்று தான் ஜெயலலிதா கூறினார் , தன்னுடைய சொத்துக்களை ஆளாளுக்கு பிரித்து சூறையாடி கொள்ளுங்கள் என அவர் கூறவேயில்லை.ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் எங்களின் குடும்ப சொத்து. அது அதிமுக சொத்தோ, அரசின் சொத்தோ கிடையாது. அது எங்களுக்கு சொந்தமானது. போயஸ் இல்லத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. போயஸ் இல்லத்தை மீட்டு எடுப்பேன் என கூறியுள்ளார்.
போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் தீபா இப்படி கூறியிருப்பது அதிமுகவினரை  கலக்கமடைய செய்துள்ளது.Recent Articles

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

கட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்!

இவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண் சுட்டுக் கொலை! தில்லியில் பயங்கரம்!

இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். மற்றும் அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.!

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்

பின்னர் அவர் கூறுகையில்,எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என சுபஸ்ரீ குடும்பத்தினரிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Related Stories