
நெல்லையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துாத்துக்குடிக்கு வந்த திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பா.ஜனதா மறுமுறை ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாட்டையே ஒரு மொழி, ஒரு மதம் என்று எல்லாவற்றையும் அவர்கள் நினைக்கும் அடையாளத்துக்குள் கொண்டு வர பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் மூலம் மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதனை தி.மு.க.வும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தி.மு.க. தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடக்கூடிய இயக்கம்..
அவர்களின் சரித்திரம் அவர்களுக்கு தெரிந்து இருந்தால் இதுபோன்று பேசமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.



