ஆறு வயது சிறுமி உயிரிழப்பு! ஆத்திரத்தில் மாடியிலிருந்து வீசிய சிற்றன்னை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
suryakala - 2026

சென்னையில் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த முதல் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில், பார்த்திபன் என்பவரது 6 வயது சிறுமி ராகவி. இந்தச் சிறுமி முதல் வகுப்பு படித்து வருகிறார்.

இரண்டாவது மாடியிலிருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சிறுமியை குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும், வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

suriyakala 1 - 2026

இதுதொடர்பாக சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் மாற்றாந்தாய் சூர்யகலா மீது சந்தேகமடைந்த சேலையூர் காவல்துறையினர் அவரிடம் கடுமையான விசாரணை செய்ததாக தெரிகிறது. இதில் சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாக சூர்யகலா ஒப்புக்கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.