
சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் புழல் திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார் மனோ. இவர் தீபாவளி தினத்தன்று கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அன்றைய தினம் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார் மனோ. அப்பொழுது சென்னை அம்பத்தூர் அருகே , அவருடைய கார் நிலை தடுமாறி சாலைத் தடுப்பில் மோதியது.

இதில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி லிவியா விபத்தில் பலத்த காயமடைந்ததால் தற்போது ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். மனோவின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..