
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் இரண்டு இடங்களில் தேசிய புலனாய்வுமுகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று உக்கடம் பகுதியில் ஜி எம் நகரில் நிசார் என்பவரது வீட்டிலும் உக்கடம் லாரிபேட்டையில் செளருதீன் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோவையில் சோதனை நடைபெற்ற வீடுகளில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையை தொடர்ந்து கோவை மாநகர காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டில் எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.