நாந்தான் திமுக.,வுலயே இல்லியே… எங்கிட்ட வந்து ஏன் இந்தக் கேள்விய கேக்குறீங்க என்று எரிச்சலுடன் பதிலளித்துச் சென்றார் மு.க.அழகிரி.
பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜாவின் இளைய மகளின் திருமணம் நடைபெற வுள்ள நிலையில், ஹெச்.ராஜா வீட்டுக்கு வந்தார் மு.க.அழகிரி. அவரது மகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் ஹெச்.ராஜாவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து வெளியே வந்த மு.க.அழகிரியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்!
திமுக பொதுக்குழுக் கூட்ட தீர்மானம் குறித்தும், உதய நிதிக்கு திமுக.,வில் கொடுக்கப் பட்டுள்ள பதவி குறித்தும் செய்தியாளர்கள் அழகிரியிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு அவர், நான் தான் திமுக.,வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லையே. அப்படியிருக்கும் போது என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? எனக் கூறிவிட்டுச் சென்றார்.