
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் ஹபிப் என்பவரின் எலுமிச்சைத் தோட்டத்தில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கண்டறியப் பட்டது.
மலைப்பாம்பைக் கண்டு, ஹபீப் சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனவர் அசோக்குமார் பொதிகை இயற்கை சங்க தலைவர் சேக் உசேன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவிக்கு தகவல் கொடுத்து பாம்பைப் பிடிக்க அழைத்து வந்தார்.
அவர்கள் அந்தப் பாம்பை உயிருடன் பிடித்து புளியங்குடி வன பகுதியில் கொண்டு விட்டனர்.
இவர்களுடன் வனக்காப்பாளர் கோபி,முத்துராம் மற்றும் கந்தசாமி வேட்டை தடுப்பு காவலர்கள் பிள்ளையார், திருமலை, ஜோதிமணி ஆகியோர் இருந்தனர்.



