ரஜினியின் அரசியல் குறித்து.. ஜோதிடர் பாலாஜிஹாசன்!

Published:

balaji hassan e1563699893905 - 2026

உலககோப்பையைக் கணித்து சொன்ன ஜோதிடர் பாலாஜிஹாசன் ரஜினியின் அரசியல் வரவைக் குறித்து சொன்ன செய்தி வைரலாகிறது

சேலம் மாவட்டம் செவ்வாய் பேட்டையைச் சேர்ந்தவர் இளம்வயது ஜோதிடர் பாலாஜிஹாசன். இவர், 2019 உலகக்கோப்பையில் அரைஇறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளை 3 மாதங்களுக்கு முன்பே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

world cup 2019 - 2026

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் என்றும், அதில் நியூசிலாந்து வெற்றி அடைய வாய்ப்புள்ளது என்றும் கணித்து கூறியிருந்தார்.

பாலாஜிஹாசன் கணித்தது போலவே அரையிறுதிக்கு இந்தியா – நியூசிலாந்து தகுதிபெற்று, அப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி அடைந்தது.

rajini 1 - 2026

இதையடுத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலாஜிஹாசன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இவரது கணிப்பை பாராட்டி, நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ட்விட்டரில் பாலாஜிஹாசன் குறித்து பேச, ஒரே நாளில் பிரபலமடைந்தார்.

ajith 3 - 2026

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி பாலாஜிஹாசனிடம் பேட்டி எடுத்த போது, அவரிடம் விஜய், அஜித், ரஜினி அரசியலுக்கு வருவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

அதற்கு அவர், ‘விஜய் தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார். அஜித் அரசியலுக்கு வரவே மாட்டார்.அரசியலில் வரவிருக்கும் ரஜினிக்கு மக்களின் ஆதரவு இருக்காது’ என்று தெரிவித்தார்.

vijay bigil - 2026

ரஜினியின் பிறந்தநாளான இன்று, பாலாஜிஹாசனின் இந்த வீடியோவை அரசியல் கட்சியினர் பரப்பி வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Related articles

Recent articles

spot_img