கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் காலி பண்ண துணிந்த மனைவி!

Published:

husband - 2026

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு மெக்கானிக்.. போன 29-ம் தேதி சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் எலக்ட்ரிக் ரெயிலில் இவர் பயணம் செய்தார்.

அப்போது, அரக்கோணம் அருகே தவறி விழுந்து விட்டதாக கூறி அரக்கோணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

இவ்வளவு நாள் தீவிர சிகிச்சை நடந்து வந்த நிலையில், அவரிடம் அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போது ராஜேந்திரன் சொன்னதாவது: “நான் 29-ம் தேதி மதியம், திருத்தணி முருகன் கோயிலுக்கு போகலாம்னு சென்னை ஆவடி ரயில்வே ஸ்டேஷனில் ஏறினேன்.

wife - 2026

அரக்கோணத்திற்கும், திருத்தணிக்கும் நடுவில் காட்டு ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் வந்தபோது, ஒரு பெண்ணும் 3 பேரும் சேர்ந்து திடீரென என்னை கொலை செய்வதற்காக ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

அந்த பெண் உட்பட எல்லாருமே முகத்தை கர்சீப்பால் கட்டி இருந்தனர். எனக்கும், என் மனைவி அஸ்வினிக்கும் நிறைய தகராறு இருக்கிறது.. ஒருவேளை அஸ்வினிதான் இப்படி கூலிப்படையை ரெடி பண்ணி என்னை கொலை செய்ய பிளான் பண்ணி இருப்பாள் என்று சந்தேகமாக இருக்கிறது” என்றார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இதையடுத்து போலீசார் அஸ்வினியை பிடித்து விசாரித்தனர். அப்போது, “எனக்கும் அனுராக் என்பவருக்கும் கள்ள உறவு இருக்கு. இது என் கணவனுக்கு தெரிந்துவிட்டது.. எங்களை பிரிக்க படாத பாடு பட்டார்.. இதனால் எங்களுக்கு ஆத்திரம் வந்தது. அனுராக்குடன் செல்போனில் பேசினால்கூட அவருக்கு ஆகாது. அதனால்தான் அவரை கொல்ல முடிவு செய்தோம்.

husband wife - 2026

ஆனால் அவர் “நீ திருந்தணும். திரும்பவும்என்கிட்டயே வந்துடணும். அதுக்காக திருத்ததணி கோயிலுக்கு போய் வேண்டிட்டு வர்றேன்”ன்னு என்கிட்டயே சொல்லிட்டு கிளம்பினாரு.

உடனே நான், அனுராக்கிற்கு இந்த விஷயத்தை சொன்னேன்.. அவருடைய தம்பி, நண்பருடன் சேர்ந்து கொல்ல பிளான் செய்தோம். ரயிலில் இருந்து தடுமாறி விழுந்து இறந்துவிட்டதாக சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ரயிலுக்குள் ஏறி கொண்டோம். பிரிட்ஜ் வந்ததும் தள்ளிவிட்டோம்” என்றார்.

ரயிலில் இருந்து அனைவரும் சேர்ந்து தள்ளிவிட்டாலும், அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றிருக்கிறது. அதனால்தான் தண்டவாளம் ஓரத்திலேயே விழுந்து்ள்ளார்.

கீழே விழுந்ததில் ராஜேந்திரன் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லாமல் படுகாயங்களுடன் பிழைத்துள்ளார் என்கிறார்கள் காவல்துறையினர். இப்போது, அஸ்வினி, கள்ளக்காதலன் அனுராக், கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரும் வேலூர் ஜெயிலில் உள்ளனர்!

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img