சென்னையில் எங்கெல்லாம் நாளை மின்தடை?

Published:

eb - 2026

பராமரிப்பு பணிகளால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கே.கே.நகர், அடையார், வியாசர்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:22-01-2020(நாளை) பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை நகரின் சில பகுதிகளில் காலை 9 மணிக்கு மின்வினியோகம் நிறுத்தப்படும்.

கே.கே.நகர் சுற்றுவட்டார பகுதிகளில் கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலத்தின் ஒரு பகுதி, பிருந்தாவன் நீட்டிப்பு, நக்கீரன் தெரு, கிண்டி ஒரு பகுதி,
ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம் ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

வியாசர்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஜி.என்.டி ரோடு பகுதி, கனகசத்திரம் பகுதி, புனித அனிஸ் கல்லூரி மற்றும் பள்ளி, எம்.பி வேதா தெரு, கே.கே.ஆர் அவென்யூ, தட்டான்குளம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

அடையார் சாஸ்திரி நகர் பகுதியில் 1வது, 3வது கடல் நோக்கு சாலை, ஹவுசிங் போர்டு, ராஜகோபாலன் மெயின் ரோடு, ஆசிரியர் குடியிருப்பு 1,2,3,4 தெரு ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடியும் பட்சத்தில் 5 மணிக்கு முன்னதாக மின் வினியோகம் தொடங்கும். இவ்வாறு மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Related articles

Recent articles

spot_img