December 6, 2025, 2:12 AM
26 C
Chennai

தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்!

IMG 20200127 WA0006 e1580150358190 - 2025

தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும், திருச்சி பாஜக., மண்டலத் தலைவர் விஜய் ரகு படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில்…

திருச்சி பாரதிய ஜனதா கட்சி மண்டலத் தலைவர் திரு விஜய் ரகு இன்று(27/01/2020) திங்கட்கிழமை அதிகாலை முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலக்கரை பகுதியைச் சார்ந்த விஜய் ரகு நேற்றைய தினம் காந்தி மார்க்கெட் பகுதியில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தார்.

இன்று அதிகாலை அதே இடத்தில் விஜய் ரகு படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழகத்தில் ‘எஸ்டிபிஐ’ ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ போன்ற அமைப்புக்கள் தொடர்ந்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன் பிரதமரையே சோலிய முடிக்கவேண்டும் என்று பேசினார், ஏன்? இன்னும் சாய்பு மார்கள் சும்மா இருக்கிறார்கள். என்று வெளிப்படையாகப் பேசினார்.அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய பேனா விற்பனை செய்யும் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரவீந்திரன் அவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். நேற்றைய தினம் ஆடிட்டர் குருமூர்த்தி படுகொலை செய்யத் திட்டம் தீட்டி அவரது வீட்டை நோக்கி வந்துள்ளார்கள். கோவை மேட்டுப்பாளையத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாஜக மகளிரணி நிர்வாகிகள் முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளால் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படி தொடர்ந்து தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருவது பெரும் கவலையை கொடுக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தேசிய புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்படுகிறார்கள். நாடு முழுக்க இவர்களின் சதித் திட்டங்கள் அம்பலமாகி வருகிறது.

தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களை தடை செய்ய வேண்டும் .

படுகொலை செய்யப்பட்டுள்ள விஜய் ரகு குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். இந்த படுகொலை சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகளை கைது செய்து அவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும். காவல்துறை அதிகாரி வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்திருந்தால் இத்தகைய குற்றங்கள் நடந்து இருக்காது.

எதிர்கட்சியான திமுக இது விஷயத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகிறது. வில்சன் படுகொலைச் சம்பவத்தையும், இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்துகின்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை திமுக கண்டனம் செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாம் தமிழர் போன்ற அமைப்புகளும் திராவிடர் கழகமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் படுபாதக செயல்களுக்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரவு தெரிவித்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

இதன்காரணமாக தமிழகம் வன்முறைக் காடாக மாறும் சூழ்நிலை உள்ளது. தினசரி அதிமுக மற்றும் பிஜேபி தொண்டர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் வாடிக்கையாக மாறியுள்ளது. எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு இத்தகைய வன்முறையாளர்களை ஒடுக்கவேண்டும். இந்து மக்கள் கட்சியின் சார்பில் படுகொலை செய்யப்பட்டுள்ள விஜயரகு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

விஜய் ரகு படுகொலைக்கு நீதி வேண்டியும் அதிமுக மற்றும் இந்து இயக்கங்களை சார்ந்த குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், திருச்சியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.

நடுநிலையாளர்களும், தேச பக்தர்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ள வில்சன் மற்றும் விஜய ரகு ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்.
– என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவுனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories