
திருநெல்வேலி பேட்டை பகுதியில், பிப்.7ம் தேதி வாலாஜா பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வரும் இந்துக்களின் கடைகள் அடித்து நொறுக்கப் பட்ட விவகாரத்தில், வேடிக்கை பார்த்து ரவுடிகளுக்கு துணையாக இருந்ததாக போலீஸ்காரர் மீது இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.
இது குறித்து, இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் ஒரு புகார் மனுவை போலீசில் கொடுத்திருக்கிறார். அதில்…

நான் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறேன். பேட்டை வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் இந்துக்கள் முறையான வாடகை செலுத்தி இருந்து வருகிறார்கள். நேற்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த கடையை நடத்தி வந்த நபர்களிடம் பிரச்சனை செய்ததாக கேள்விப்பட்டு அந்த நபர்களிடம் விசாரணை செய்தபோது, பிப்ரவரி 7 நேற்று காலை சுமார் 11 மணி அளவில் தங்களின் கீழ் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் பாட்ஷா அவர்கள் மற்றும் நான்கு காவலர்கள் கண்முன்னே இஸ்லாமிய குண்டர்கள் மற்றும் ரவுடிகள் வந்து கடையை உடைத்து வாடகைதாரர்களை மிரட்டியும் பொருள்களை சேதம் செய்தும் சட்ட முரணான செயலில் ஈடுபட்டார்கள்.
அப்போது அங்கு நின்ற மேற்படி காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார்கள் இந்த செயலின் காரணமாக மேற்படி காவலர்கள் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பது போல தெரிகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஜெயக்குமார்.
இதனிடையே, எத்தனையோ இந்துக் கோயில்களின் இடங்களில் இசுலாமியர்கள் கடைகளை வைத்துள்ளனர். பல கோயில்களின் இடங்களை, குறிப்பாக அறநிலையத்துறை கோயில் இடங்களைக் கூட குத்தகை பெற்று பிரசாத ஸ்டால் கூட நடத்தி வருகின்றனர். ஆனால் இங்கே முன்னர் முருகன் கோயிலாக இருந்தது என்றும், பின்னர் பள்ளி வாசல் ஆனதாகவும் கூறப்படும் இடத்தில் இந்துக்கள் கடைகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்று மிரட்டி அதனை காலி செய்யச் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலுமே மசூதி, பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் வரும் இடங்களில் இந்துக்கள் கடைகள் இருக்காது. அவ்வாறு வைத்திருக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்துக்களோ அவர்களுக்காக எல்லா வகையிலும் இறங்கிச் செல்கிறோம் என்று புகார் தெரிவித்தனர் அங்கே கூடிய இந்து அமைப்பினர்.
இந்நிலையில், பேட்டை நகர இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இன்று மதியம் 1 மணிக்கு செக்கடி அய்யா கோயிலில் நடைபெறுவதாகவும், அதில் இந்த விவகாரம் குறித்து பேசப்படும் என்றும், இந்து வியாபாரிகள் அமைப்பு உருவாக்கப்படும் என்றும் பேட்டை பகுதி இந்து முன்னணியினர் தகவல் தெரிவித்தனர்.