நவீன தீண்டாமை! ‘துக்க’ வீட்டிலும் ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை!

Published:

dmk stalin pic - 2026

அசுரன் படம் பார்த்துவிட்டு வந்து கருத்துக் கந்தசாமியான ஸ்டாலின் இப்போதும் துரத்தும் விமர்சனங்களால் ஓடிக் கொண்டிருக்கிறார்! இப்போது புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

துக்க வீட்டிலும் நாலு பேருடன் சரியாக அமர்ந்து, அவர்களுடன் சாதாரண வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடியாத சில்வர் ஸ்பூன் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்ற மெதப்பில் ஸ்டாலின் நடந்து கொள்வது கட்சியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது. கட்சிக்காக இரவு பகல் பாராமல் வாழ்க்கையை, பணத்தை, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம், ஆனால் இவர்கள் குடும்பமோ ஏதோ ராஜா, இளவரசர், இளவரசரின் வாரிசு என்றெல்லாம் மன்னர் கால மன மிதப்பில், ஜமீந்தார் பாணியில் நடந்து கொள்கின்றனர் என்று வேதனைப் படுகின்றனர் திமுக.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள்.

stalin cinema seat - 2026

அண்மையில் அசுரன் சினிமா பார்க்கச் சென்ற ஸ்டாலின், தன்னை அடுத்து இரு புறங்களிலும் துண்டு போட்டு எவரும் தன் பக்கத்தில் அமர்ந்து கொள்ளாத படி நவீன தீண்டாமையைக் கடைப்பிடித்தார். அதுவே வைரலாகி, ஸ்டாலினை அசிங்கப்படுத்தினார்கள் சமூகத் தளங்களில். ஆனால் அதைக் கேட்டும் திருந்தவில்லை ஸ்டாலின்… என்கின்றனர் திமுக.,வின் அடிமட்டத் தொண்டர்கள்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட, ஸ்டாலின் வயல் வெளியின் மண்ணில் நடக்கும் போது, ஷூ போட்டுக் கொண்டும், அடுத்து இறங்கிச் செல்லும் போது, ஷாக்ஸ் போட்டுக் கொண்டும் நடந்து சென்றார். ஆனால் நாங்கள் எல்லாம் விவசாயிகள். இந்தக் கை மண்வெட்டி பிடித்த கை. கதிரறுத்த கை என்றெல்லாம் அசிங்கப் படுத்தியும் ஸ்டாலினுக்கு புத்தியில் ஏறவில்லை!

இப்போது துக்க வீட்டில், மீண்டும் தான் அமரும் இடத்தில் மட்டும், துண்டு போட்டு, அழுக்கு படாத அளவிலும், அந்தத் திண்ணையில் மற்றவர்களைப் போல் அமர மனம் இல்லாமல் வெள்ளை வேட்டி அழுக்கு அடையாமல் நவீன தீண்டாமையைக் கடைபிடிக்கிறார் என்று கூறுகின்றனர். இந்தப் படம் இப்போது சமூகத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Related articles

Recent articles

spot_img