
ஈரோடு:
நடிகர் ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார். அவ்வப்போது பேசவும் செய்தார். அவரது முதல்நாள் பேச்சே அரசியல் கலந்து இருந்தது. இதனால், அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது.
அவரது பேச்சை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் அதிகம் பரவின. இதனால் வருத்தமடைந்த ரஜினி, நேற்றைய தமது பேச்சின் போது, வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ், தமிழுணர்வு என்று பேசுபவர்களால் நடிகர் ரஜினிகாந்த் காயம்பட்டுள்ளது தெரியவருகிறது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஸ்டம் கெட்டுப்போனதாக கூறும் ரஜினி, அதனை கெடுத்தது யார் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றார்.



