ஊரடங்கு: கர்ப்பிணி பெண் தற்கொலை! வறுமை?

Published:

pregnant women 1 - 2026

சென்னையை அடுத்த புழல், லட்சுமி அம்மன் கோயில் 2-வது தெருவைச் சேர்ந்தவர், ஜெகன் செல்வராஜ் (25). இவர், கூலி வேலை செய்துவருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவும் (20) காதலித்தனர். பின்னர், இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். சரண்யா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஊரடங்கு காரணமாக ஜெகன் செல்வராஜுக்கு வேலை இல்லை. வீட்டிலேயே இருந்ததால் அவரின் குடும்பவம் வறுமையில் வாடியது. அதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தச் சூழலில், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரத்தை ஜெகன் செல்வராஜ் தொடங்கினார். தெருத் தெருவாக காய்கறிகளைக் கொண்டுசென்ற செல்வராஜுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. காய்கறிகளும் விற்கவில்லை. அதனால் அவரின் குடும்பத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், வியாபாரத்துக்குச் செல்ல தள்ளுவண்டியில் காய்கறிகளை நேற்று காலை ஜெகன் செல்வராஜ் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் மனைவி சரண்யா இருந்தார். காய்கறிகளைத் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு வியாபாரத்துக்கு செல்வதை மனைவியிடம் கூற அவர் வீட்டுக்குள் சென்றார். அப்போது, சரண்யா புடவையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெகன்செல்வராஜ் சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

போலீஸ் ஊரடங்கு சமயத்தில் ஜெகன் குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சி நடந்துள்ளது. அது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த மன வேதனையிலும் வறுமையின் காரணமாகவும் சரண்யா தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

thukku 1

அக்கம்பக்கத்தினர் உதவியோடு சரண்யாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சரண்யா இறந்துவிட்டதாகக் கூறினர். அதனால் சரண்யா குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெஞ்சாம், சரண்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்துவருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஜெகன் செல்வராஜும், சரண்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். ஆரம்பத்தில் சந்தோஷமாக குடும்பத்தை நடத்திவந்தனர். ஜெகன் செல்வராஜுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

pragnant lady - 2026

சரண்யாவின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். ஊரடங்கு சமயத்தில் ஜெகன் குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சி நடந்துள்ளது. அது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த மன வேதனையிலும் வறுமையின் காரணமாகவும் சரண்யா தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

நிறைமாத கர்ப்பிணி சரண்யா தற்கொலை செய்துகொண்டது, அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img