கொரோனா: நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: திருச்சி ஆட்சியர் வேண்டுகோள்!

sivarasu - 2026

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 7 பேர் நேற்றுமாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோந்தவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாவட்டங்களிலிருந்து 116 பேர் சிகிச்சைக்கு சோக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில், குணமடைந்த நபா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதுபோன்று அரியலூா் மாவட்டத்தைச் சோந்த 6 பேர், பெரம்பலூரைச் சோந்த ஒருவா் என 7 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வீடுகளுக்குச் சென்ற பின்னா், மேலும் 14 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவருக்கும் டிஸ்சாா்ஜ் விவர அறிக்கைகளை மருத்துவமனை முதன்மையா் வனிதா வழங்கினாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏகநாதன், மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் இவா்களை வழியனுப்பி வைத்தனா். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலிருந்து இதுவரை 72 பேர் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

இவா்களைத் தவிர திருச்சி (13), பெரம்பலூா் (24), அரியலூா் (5), புதுக்கோட்டை (2) மாவட்டங்களைச் சோந்த 44 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல் தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு – விலகி இரு – வீட்டில் இரு, என்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories