உயரும் லாரி வாடகை! பொருட்கள் விலைவாசியும் உயரும் அபாயம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல் வணிகம்
lorry

பல மாவட்டங்களில் சரக்கு லாரிகளின் வாடகை உயர்வால், பல பொருட் களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் 50 நாட்கள் பலரின் வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஊடங்கால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாவட்ட எல்லைகள் பல நாட்கள் மூடப்பட்டது. இதனால் லாரி போக்குவரத்து அறவே முடங்கிப் போனது.

இதனால் கடும் பொருளாதார சரிவை அவர்கள் சந்தித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வால்,மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் லாரி போக்குவரத்து தொடங்கியுள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கு பின்புதான், மதுரையிலிருந்து- கேரளா, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுக்கு லாரிகளை இயக்க வாய்ப்பு கி்ட்டியுள்ளது. அதிலும் 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

அத்துடன் தொழில் நிறுவணங்கள் முழுமையாக இயக்க்ப்படாததால், வடமாநிலங்களுக்கு லாரிகள் இய.க்கம் தற்போது நடைபெறவி்ல்லை. ஆகவே தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் வகையில் , டீசல் விலை உயர்வையும் சமாளிக்கும் பொருட்டு, லாரி வாடகையை 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர். இதனால் பல மாவட்டங்களில் அத்தியவசியப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், மதுரையில் பல இடங்களில் வெங்காயம், சோயா, எண்ணை விலையில் உயர்வு தென்பட்டது. விலை உயர்வால், பல இடங்களில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

lemon
lemon

மதுரையில் கடும் வெய்யிலால் எலுமிச்சம்பழம் விலை உயர்வு~

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கடைகளில் எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் அண்ணாநகர், கே.கே. நகர், புதூர், விளாச்சேரி, சிம்மக்கல், கருப்பாயூரணி, வண்டியூர், செல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோரக் கடைகளில் எலுமிச்சம் பழம் ஓன்றின் விலை ரூ. 5-க்கு விற்கப்பட்டதாம்.

மதுரை நகரின் நிலவும் கடும் வெப்பத்தால், மக்கள் பழச்சாறு எடுக்க அதிகம் பயன்படுத்துவதாலும், தேவை அதிகரிப்பாலும், கடந்த மாதம் வரை விற்கப்பட்டு வந்த எலுமிச்சம்பழம் ரூ. 3-க்கு விற்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்புக்கு பிறகு, இப் பழத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கடைகளின் பழச்சாறு விலையும் உயரும் நிலை ஏற்படலாம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.