
ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் உட்பட 11 பேர் மீது வழக்கு
கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா வைரஸ் நெருக்கடியால் தமிழகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வர மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்தி தடையை மீறி அனுமதி இல்லாமல் நேற்று மாலை கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபுபக்கர் எம்எல்ஏ தலைமை வைத்தார்.
மாவட்ட தலைவர் செய்ய சுலைமான், மாவட்ட செயலாளர் இக்பால், மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செய்யது மசூது வரவேற்றார். நகர செயலாளர் லத்தீப், பொருளாளர் அகமது கபீர், செய்யது பட்டாணி அரசு மாவட்ட தலைமை ஹாஜி மைதீன் அன்சாரி, கடையநல்லூர் தொகுதி அமைப்பாளர் ஹைதர் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் வகாப், முஹம்மது கோயா, புளியங்குடி இஹ்ஸானுல்லா, பேட்டை ஜபருல்லாஹ், ரஹ்மதுல்லாஹ் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சிநிர்வாகிகள் ஜமாஅத் உலமா சபை குறிப்பிட்டார்கள் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் உட்பட 11 பேர்கள் மற்றும் சிலர் மீது கடையநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது