dowary

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிக்குமார், து.அம்பலகாரன்பட்டியை சேர்ந்த சுந்தரேஸ்வரி என்ற இளம்பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு கரம்பிடித்தார்.

தற்போது தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு பழனிக்குமார் வெளிநாட்டுக்கு சென்று பணிபுரிந்து வருகிறார். அவர் விடுமுறை கிடைக்கும்போது ஊருக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தரேஸ்வரி மாமியார் வீட்டிற்கு சென்று மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.

dowary 1 - 2026

ஆனால் அதற்கு அடுத்த மூன்றாவது நாளில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், மாமியார், மாமனார் வரதட்சணை கேட்டு மகளை சித்ரவதை செய்ததாகவும், பணம் கொடுக்காததால் மகளை அடித்துக் கொன்றவிட்டதாகவும் அவரது தந்தை, கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் புகார் குறித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மேலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
dowary

இது குறித்து சுந்தரேஸ்வரியின் உறவினர்கள் கூறுகையில், கல்யாணம் முடிந்த நாளில் இருந்து எங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக்கொண்டுதான் இருந்தாங்க. நாங்களும் பொண்ணு கொடுத்துட்டோம்ன்று பொறுமையாக செஞ்சிக்கிட்டுத்தான் இருந்தோம்.

கடைசியில தங்க அரையாண் போடலன்னு பிள்ளையை அடிச்சேக் கொன்னுட்டாங்க என்று கண்ணீர் மல்க கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending