விவாகரத்து செய்த மனைவியுடன் வாழ வலியுறுத்திய மைத்துனர்கள்! விரக்தியில் தீ குளித்த இளைஞர்!

fire

சென்னையில் விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 34). இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் வாசலில் நின்றபடி திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரித்திவிராஜிடம் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அவரது உடலில் தீக்காயம் அதிகளவில் இருந்ததால் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் அவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:- பிரித்திவிராஜ் அம்பத்தூர், பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். அவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது வேறொரு பெண்ணுடன் பிரித்திவிராஜ் திருமணம் செய்ய இருந்தார்.

இந்தநிலையில் முதல் மனைவி சத்யாவின் சகோதரர்களான தாமு, இளையராஜா ஆகிய 2 பேரும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பிரித்திவிராஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் தூக்கிச்சென்று அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, தனது தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என அவரை அடித்து உதைத்தனர். மேலும் விவாகரத்து பெற்ற முதல் மனைவி சத்யாவுடன் அவருக்கு மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இதில் மிகுந்த மனவேதனையில் இருந்த பிரித்திவிராஜ் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி வீட்டுக்கு வந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரித்திவிராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி சத்யா, அவரது சகோதரர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories