வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்ஸில் இது என் கடைசி நாள் என வைத்து விட்டு காவலர் தற்கொலை!

Published:

kavalar

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் பணியாற்றி வந்தவர் காவலர் ஜோசப். 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 22ம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார் ஜோசப்.

இதனிடையே, நேற்று காலை 8.45 மணியளவில் வீட்டில் இருந்த ஜோசப், விஷம் குடித்துவிட்டார். நேற்று காலை, ஜோசப் அவரது அறையில் மயங்கி கிடந்ததை, அவரது தாய் பார்த்துள்ளார். .சகோதரர் ஜான்சன்,உடனடியாக, அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

செம்பியம், காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜோசப், 35; புதுவண்ணாரபேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு முதல்நிலை காவலர். இவருக்கு, ஜெகதீஸ்வரி, 32 என்ற மனைவியும், சந்திப் குமார் (11) என்ற மகனும், யோகிதா (10) என்ற மகளும் இருக்கின்றனர். குழந்தைகள் இருவரும் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர் .

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,ஒரு வாரத்திற்கு முன், கணவன் – மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஜோசப்பை, அவரது மனைவி பிரிந்து, ஓட்டேரியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் விரக்தியடைந்திருந்த ஜோசப், கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து காவல்துறையின் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘மேலும், ஜோசப் தற்கொலை செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தனது வாட்ஸ்அப்பில் ‘‘டுடே மை லாஸ்ட் டே’’ என ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது., அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img