திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை புற நகர்அ.தி.மு.க மாவட்ட
செயலாளராகவும் இருப்பவர் கீழப்பாவூரை சேர்ந்த கே.ஆர்.பி.பிரபாகரன் ஆவார். இவரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாவட்ட செயலாளராக அறிவித்தார் .
தற்போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக நீடிக்கும் இவரை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியதாக டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார் , இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் கீழப்பாவூரில் உள்ள
மைதானத்தில்டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்தனர். தலைமை கழக பேச்சாளர் அப்பாத்துரை, அட்மா சேர்மன் வி.கே.கணபதி, பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,பி.எஸ்.என்.எல். ஆலோசனை குழு உறுப்பினர் மதியழகன், கீழப்பாவூர் யூனியன் முன்னாள் துணை தலைவர் உத்திதிரகுணபாண்டியன் மற்றும் அ.தி.மு.கவினர் கலந்துகொண்டனர்.




