என்ன நடக்கிறது ஆர்.கே.நகரில்? இன்றைய நிகழ்வுகள்

Published:

ஆர்.கே.நகர் தொகுதிக்குள் உரிய ஆவணங்களின்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தனியார் கால் டாக்சி நிறுவனங்களுக்கு தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் பரிசு பொருட்களை வழங்குவதாக, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தொடர்ந்து பணப்பட்டுவாடா நடைபெறுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில் புகார் மனு அளித்தனர்.

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக வேட்பாளர் மருதுகணேஷ் சார்பில் நாளை வழக்கு தொடரப்படும்

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.

பணப்பட்டுவாடாவை போலீசார் தடுக்கவில்லை, காவல் இணை ஆணையர் உள்ளிட்ட 11 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img