
மதுரை ஜெய்ஹிந்த்புரம் திருப்பதி நகரை சேர்ந்த காதர் மஸ்தான் என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரசூல் பாத்திமா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல் ஆட்டோ ஓட்டும் பணிக்கு சென்ற காதர் மஸ்தான் மீண்டும் வீட்டிற்கு குடித்துவிட்டு போதையில் வந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் மீண்டும் ஆட்டோவுடன் வெளியே சென்றார்.
பின்னர் இரவு வீடு திரும்பாத நிலையில், காலை சோலையழகுபுரம் பகுதியில் மர்ம உறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பட்டபகலில் சாலை ஓரத்தில் மர்ம உறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காதர் மஸ்தான் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனை அவரது மனைவி ரசூல் பாத்திமா கண்டித்துள்ளார். அதன் காரணமாக காதர் மஸ்தான் அடிக்கடி மனைவியிடம் பிரச்சனை செய்து வந்ததால் தொடர்ந்து வீட்டில் உறவினர்களோடும் பிரச்சினை இருந்து வந்தததாகவும் கூறப்படுகிறது.
மேலும் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் உறவினர்களே கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றகோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.