
திருப்பத்தூர் அருகே கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 2 பேர், அதிலிருந்து தப்பிக்க கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் பெரியபேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்ரமணி. இவர் பல இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திரா, சோனியா ஆகியோர் பணியாற்றி வந்தனர். நிதி நிறுவனத்திற்கு வரும் நகை மட்டும் பணத்தை கண்காணிப்பதே இவர்களது பணி. இவர்கள் இருவரும் தங்களது அதில் கைவரிசையை காட்டியது அம்பலமானது.
கடந்த டிசம்பர் மாதம் அலுவலகத்தின் கணக்குகளை சரிபார்த்த போது சந்திரா மற்றும் சோனியா ரூ.24 லட்சம் பணமும், 46 சவரன் நகையும் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கையும் களவுமாக சிக்கிய பெண்கள் பணத்தை திருப்பித்தருவதாக தெரிவித்தும், பாலசுப்ரமணி அவர்களை பணிநீக்கம் செய்து பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த டிச.9ம் தேதி பாலசுப்ரமணி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் விஷ்ணு, பிரகாஷ், அங்கப்பன் ஆகியோர் சிக்கினர். அவர்கள் 3 பேரும் சந்திரா மற்றும் சோனியா, பாலசுப்ரமணியை கொலை செய்வதற்காக வைத்த அடியாட்கள் என்பது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, சந்திரா, சோனியாவை கைது செய்த போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.