
2 பெண்கள் குளிப்பதை தினந்தோறும் ஒருவர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வந்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சரளா நகரை சேர்ந்தவர் ராஜன்( 34) . அதே பகுதியில் உள்ள தனியார் ஃபேக்டரியில் சூபர்வைசராக வேலை பார்க்கிறார்.
அந்த வீட்டு மாடியில் 2 பெண்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் 2 பேரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இரு வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜன் மனைவி, அவரது அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். ராஜன் மட்டும்தான் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
தினமும் ராஜன் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு வெளியே வரும்போது, அந்த பாத்ரூமில் செல்போன் வீடியோவை ஆன் செய்துவிட்டு வருவாராம்.
இது தெரியாமல் அந்த வீட்டின் 2 பெண்களும் குளித்து வந்துள்ளனர். அவர்கள் குளித்துவிட்டு வந்த பிறகு, மறுபடியும் பாத்ரூம் சென்று, செல்போனை எடுத்து வந்துவிடுவாராம். அதில் உள்ள வீடியோவை ஆன் செய்து, தினமும் அதை ரசித்து கொண்டு இருந்திருக்கிறார்.
இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, 2 பெண்களில் ஒருவர் குளிக்க போயிருக்கிறார். அப்போதுதான், செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தே போய்விட்டார். ராஜனின் செல்போனை எடுத்து கொண்டுபோய், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டி, நடந்த சம்பவத்தை பற்றியும் சொல்லி உள்ளார்.
அந்த பகுதி மக்கள் ராஜனை அடித்து, ஸ்ரீபெரும்பதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்தனர். அப்போதுதான், ராஜன் பல நாட்களாகவே இந்த பெண்களின் குளியல் வீடியோவை எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. இப்போது, ராஜன் ஜெயிலுக்குள் இருக்கிறார்.