
மலேசியாவில் தைப்பூசத்தை முன்னிட்டு, கோலாலம்பூரில் ரத ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில கட்டுப்பாடுகளுடன், ரத ஊர்வலம் நடத்த தேசியப் பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல், எங்கும் ரதத்தை நிறுத்த அனுமதி இல்லை. 10 பேர் மட்டுமே ரத ஊர்வலத்தில் அனுமதிக்கப்படுவர்; இசைக்கு அனுமதி இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
வரும் புதன்கிழமை (ஜனவரி 27) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்திலிருந்து பத்துமலை கோயில் வரை ரத ஊர்வலம் செல்லும். ஜனவரி 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ரதம் மீண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்திற்கு புறப்படும்.
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் உள்ள வேளையில், பக்தர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பிற்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.