தேவேந்திர குல வேளாளருடன் மேலும் இணையும் 7 பிரிவுகள்: பிரதமர்!

modi
modi

7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள தேவேந்திர குலத்தான், கல்லாடி, பள்ளர், குடும்பன், கடையான், பண்ணாடி, வத்திரியன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேவேந்திர குல வேளாளர் பிரிவை பட்டிலினத்தில் இருந்து விடுவித்து, தனிப் பிரிவாக வகைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பரிந்துரைக்க, தமிழக அரசு ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு பரிந்துரையின் பேரில், 7 உட்பிரிவுகளும் ஒரே பிரிவாக மாற்றப்பட்டாலும் பட்டியலினத்தில் தொடரும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை எப்போதும் போல் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பான மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அதிரடி சரவெடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேவேந்திர குல வேளாளர் சகோதர, சகோதரிகள் பாரம்பரிய பெயரால் அழைக்கப்படுவர்.

7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கும் அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்படும். தேவேந்திர குல வேளாளர் அறிவிப்புக்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

தேவேந்திர குல வேளாளர் எனும் அறிவிப்பு வெறும் பெயர் மாற்றம் அல்ல. பெயர் மாற்றம் மூலம் 7 உட்பிரிவினருக்கு மதிப்பு மற்றம் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவத்தை கொண்டாடுபவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories