லாரியில் ஏற்றி வைத்த கொசுவர்த்தி! மூச்சு திணறி இறந்த ஓட்டுநர்!

Published:

lorry - 2026

கொசுவர்த்தி சுருளை ஏற்றிவைத்துவிட்டு லாரியில் உறங்கியவர் காலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து சரக்கு லாரி ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்றுள்ளது. இரவு நேரத்தில் ஓய்வெடுக்க சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தூங்கியுள்ளார். தூங்குவதற்கு முன்பாக கொசுவர்த்தியை பற்றவைத்துவிட்டு உறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கொசுவர்த்தியில் இருந்து வந்த புகை சூழ்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

lorry 2 - 2026

அருகில் இருந்தவர்களின் கண்ணாடியை உடைத்து அவரை காப்பாற்ற முயன்றபோது லாரி தீப்பற்றி எரிந்துள்ளது.

லாரியில் படுத்துறங்குபவர்கள் ஜன்னலின் கண்ணாடியை 1மி.மீ அளவிற்கு ‘கேப்’ விட்டு அடைக்க வேண்டும். மேலும், கொசுவர்த்தி சுருள்களை முழுவதும் அடைக்கப்பட்ட அறைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img