குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்
10-th-exam
1exam

குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குடிமைப் பணித் தேர்வுகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற அனைத்துத் தேர்வா்களுக்கும் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சாா்பில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்க விரும்புவோா் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு வருவோருக்கு அண்ணா மேலாண்மை நிலையத்திலேயே மதிய உணவு அளிக்கப்படும். ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும்.

முதன்மைத் தேர்வு வெற்றியாளா்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை சுயவிவரக் குறிப்புடன் மின்னஞ்சல் மூலமாக வரும் 3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். விரைவு தபால் வழியே, மகிழம்பூ, 163-1, பி.எஸ்.,குமாரசாமிராஜா சாலை (பசுமை வழிச் சாலை), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.