ஏப்ரல் 21, 2021, 11:06 காலை புதன்கிழமை
More

  திமுகவினர் மீண்டும் ஹோட்டலில் வன்முறை!

  hotel - 1

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஹோட்டல் உணவகத்தில் அராஜகம் செய்த திமுக ஒன்றிய செயலாளர். உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுகவினர்.

  கோவை வடவள்ளி பி.என்புதூரைச் சேர்ந்தவர் ஜெயபாரத் வயது 28 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பழைய பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

  நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சத்தியமங்கலம் யூனியன் சேர்மன்,திமுக ஒன்றிய செயலாளருமான இளங்கோ மற்றும் அவரது மகன் சபரிதரண் அங்கே உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

  அங்கே பணிபுரியும் ஊழியரை அழைத்த அவர் உடனடியாக வராததால் கோபமடைந்த அவர்கள் அந்த ஊழியரை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

  மேலும் திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோ தன்னுடைய போனில் இருந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அங்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல் அவர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர் மேலும் சிசிடிவி கேமராவையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

  இதனை அறிந்த அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் அங்கு விரைந்தனர் மேலும் சம்பவம் தொடர்பாக சத்தியமங்கலம் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  அவர்கள் புகாரை ஏற்க மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதாக உறுதியளித்தனர்.

  இதனையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் மீது மற்றும் அவருடைய மகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »