கொரோனா: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ‘அன்பு’ தம்பி உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
vanathi
vanathi

பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற பேரவையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

வானதி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்துகொண்ட மகிழ்ச்சியாக தருணத்தில் அவர் துக்கத்தில் இருக்கிறார்.

அது குறித்து அவர், எனதன்பு தம்பி யுவராஜ் இன்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். “எம் அக்கா” என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராத துக்கமாக மாறினான்.ஓம்சாந்தி. என்று துக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த யுவராஜுக்கு பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள், இந்து இயக்கத்தினர் பலர் இன்று சமூகத் தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.