
பெண்களிடம் சமூக வலைதளங்களில் மர்ம ஆசாமிகள் ஆபாசமாக பேசுவதையும், தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதையும் தொடர் கதையாக கொண்டுள்ளனர். இதை சிலர் சமூக வெளியில் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான சௌந்தர்யா, ஒரு சில படங்களிலும் சின்னத்திரை மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒருவர் படுக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் பதிவு செய்துள்ளார். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதற்கு முன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்த மளாவிகா சுந்தருக்கும் இது போன்ற ஆபாச செய்தியை அனுப்பியிருந்தார். அப்போது அது குறித்து பேசிய அவர், “இப்படியான மெசேஜ்களை அனுப்புபவர்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் பொழுது, அவ்வளவு துணிச்சல் இருக்கும் பொழுது, இதைப் பற்றி பேசி சமூக வலைதலங்களில் கருத்துக்களை நீங்களும் தயங்காமல் பதிவிட வேண்டும்.

வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதுபற்றி குரல் எழுப்ப வேண்டும். இவற்றை பார்க்கும் ஆண்கள், அதுபோன்ற தவறான செய்கைகளை செய்யும் ஆண்களை தேடிப்பிடித்து பாடம் புகட்ட முயலுங்கள். நன்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டார்.