காதலிப்பதாகக் கூறி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை! இளைஞர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
chinna thambi - 2026

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை கேசவன் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவருடைய மகன் சின்னத்தம்பி என்கின்ற சின்னா வயது 18.. புதுமணைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு வலை விரித்த சின்னத்தம்பி தான் உன்னை காதலிப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் அந்த சிறுமியிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி அந்த சிறுமியை அவர் பலமுறை பலவந்தமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது

மேலும் நடந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் அந்த சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இது குறித்து அவர் தன்னுடைய பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார்.

சம்பவத்தை கேட்டு பதறிப்போன அவருடைய பாட்டி உடனடியாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னத்தம்பி என்கின்ற சின்னா என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.