Rajalakshmi
Rajalakshmi

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மூன்று பேருக்கும் திருமணமாகி முதலாவது மகள் சண்முகஜெயா, 3-வது மகள் கீதா ஆகியோர் கோவில்பட்டியிலும், 2-வது மகள் கலா தூத்துக்குடியிலும் வசித்து வருகின்றனர்.

கடந்த சுமார் 8 ஆண்டு காலமாக சாமிநாதன் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவரை அவரது மனைவி ராமலட்சுமி உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராமலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ராஜலட்சுமியின் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மன வேதனையில் இருந்த சாமிநாதனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்நிலையில் சாமிநாதன் ராமலட்சுமி ஆகிய இருவரது உடலும் ஒரே மேடையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending