பீடி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருநெல்வேலி அடுத்த முக்கூட லில் சிஐடியு பீடித்தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. பாப்பாக்குடி ஒன் றிய தலைவர் சூசை அருள்சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆயிரம் பீடிக்கு சுற்றுக் கூலி ரூ.300 வழங்க வேண் டும். பஞ்சப்படி புள்ளி 1க்கு 10பைசா வழங்க வேண்டும். தரமான பீடி இலை வழங்க வேண்டும். போடு வண்டல் எடுப்பதை நிறுத்த வேண் டும். ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும். அனைத்து வங்கிகளிலும் கல்வி கடன் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்24ல் முக்கூடலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பீடி தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பென்சன்: சிஐடியு வலியுறுத்தல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari