பிப்.21 முதல் அரசியல் களத்தில்! பயணத் திட்டத்தை வெளியிட்ட பரமக்குடி நாயகன்!

Published:

சென்னை:

வரும் பிப்.21ஆம் தேதி முதல் முழு நேர அரசியல் களத்தில் இறங்குகிறார் நடிகர் கமல்ஹாசன். தான்  தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், பிப். 21ல் கட்சியை அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறார்.

வரும் 21ஆம் தேதி அன்று தனது அரசியல் கள நுழைவு இருக்கும் என்றும், அன்றைய நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார் கமல்ஹாசன்.  அதன்படி,

காலை 7.45 மணி – முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகை.

காலை 8.15 மணி – அப்துல் கலாம் பள்ளிக்கு நேரில் சென்று பார்வை.

காலை 8.50 மணி – கணேஷ் மஹாலில் மீனவர்களுடனான சந்திப்பு.

காலை 11.10 மணி – அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகை.

காலை 11.20 மணி – மதுரைக்கு புறப்பாடு.

நண்பகல் 12.30 மணி – ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயில் அருகில் பொதுக்கூட்டம்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

பிற்பகல் 2.30 மணி – பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு முன்பு பொதுக்கூட்டம்.

பிற்பகல் 3 மணிய – மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி – மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை.

பின்னர் 6 மணி – அரசியல் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்.

மாலை 6.30 மணி – பொதுக்கூட்டம் நடக்கிறது.

இரவு 8.10 முதல் 9 மணி வரை கமல்ஹாசன் உரையாற்றுகிறார்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img