திருமழிசை கோயில் கந்தாடை ஸ்ரீ உ வே அண்ணாவப்பங்கார் ஸ்வாமி என்னும் மஹான் காட்டியருளிய ஓர் அர்த்தவிசேஷம் கண்ணில் பட்டது.
ஸ்ரீகூரத்தாழ்வான் குமாரர் என்னும் பெருமையும், எம்பாரின் சிஷ்யர் ஆனவரும், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு அரிய உரை அருளியவரும் ஆன பராசரபட்டர் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளும் ஸ்ரீரங்கநாதன் என்னும் பெரிய பெருமாள் விஷயமாக ஸ்ரீரங்கராஜஸ்தவம் என்று ஓர் ஒப்பற்ற ஸ்தோத்திர விசேஷம் பாடியிருக்கிறார். அதில் ஸ்ரீமந் நாதமுனிகளைப் பற்றிப் பாடும்பொழுது
நௌமிநாதமுநிம் நாம ஜீமூதம் பக்த்யவக்ரஹே |
வைராக்ய பகவத்தத்வஜ்ஞாந பக்த்யபிவர்ஷகம் ||
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்பொழுது என்ன அர்த்த விசேஷம்? பக்தி, ஞானம், வைராக்கியம் எல்லாம் நிறைந்த ஒரு கார்மேகம் நாதமுனி என்று சொல்கிறார் அவ்வளவுதானே? அந்த மேகமாகிய நாதமுனிகளை வணங்குகிறேன் என்கிறார். ஆனால் பக்த்யவக்ரஹே என்னும் பதத்தில் உள்கருத்தை ஸ்ரீஅண்ணாவப்பங்கார் ஸ்வாமி சுட்டிக்காட்டும் பொழுது நமக்கு வியப்புதான் மிஞ்சுகிறது. பராசரபட்டரின் சுலோகங்கள் பார்க்க எளிதுபோல் தோன்றினாலும் அர்த்தங்கள் உள் நிறைந்து இருக்கும் என்பது புரியவருகிறது.
பக்த்யவக்ரஹே என்பது பக்தியாகிற தீர்த்தத்தினுடைய வர்ஷம் இல்லாத காலத்திலும் என்பது இதன் உட்பொருள் என்று இலக்கண ரீதியாக ஸ்வாமி பிரித்துக்காட்டும் பொழுது ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறார்.
சாதாரணமாக ஈரப்பசையே இல்லாமல் வறண்டு கிடக்கும் காலத்தில் திடீரென்று கார்மேகம் வந்து வர்ஷித்தால் அதன் அருமை அப்பொழுதுதான் நன்கு புரியும். ஆனாலும் பெய்த மழை மறைந்துபோகவும் கூடும். பெய்ததா என்று அயிர்க்கும் வண்ணமும் ஆகும். அப்படியெல்லாம் ஆகாமல் நின்று பெய்து நிலம் தோய்ந்த மழை போன்று ஸ்ரீமந் நாதமுனிகளாகிய மேகம் பெய்த மாமழை தொடர்ந்து தக்க ஆசாரியர்களால் விடாமல் பேணிக் காத்துப் பெரும் ஏரியாக அனைவருக்கும், இன்றுமட்டும் காலம் காலமாக உதவும் நிலைக்கு வந்தது என்றால் அப்பொழுதுதான் அந்த மேகம் அது பெய்தபொழுது பக்தியாகிற ஈரப்பசை இல்லாமல் இருந்த நிலை எல்லாம் அர்த்தம் கனக்கிறது.
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? வைராக்கியம் என்பதும், யதார்த்தமான ஜ்ஞாநம் என்பதும் கூடவே இல்லாமல் இருந்தால் அது பக்திக்கே பெரும் வருத்தம் ஆகும் என்பதைத்தான் ஸ்ரீமத்பாகவதம் தான் தொடங்கும் போதே காட்டுகிறது. எனவே ஸ்ரீமந் நாதமுனிகளாகிய ஜீமூதம் – மேகம், அன்று பெய்தபொழுதே பக்தியோடு கூட நிறைந்த யதார்த்தமான பகவத் தத்வ ஜ்ஞாநம், பகவானைத் தவிர இதர விஷயங்களில் கடும் வைராக்கியம் என்று பூரணமாகக் குறைவின்றி வர்ஷித்த கார்முகில் என்கிறார் ப
திருமழிசை கோயில் கந்தாடை ஸ்ரீ உ வே அண்ணாவப்பங்கார் ஸ்வாமி என்னும் மஹான் காட்டியருளிய ஓர் அர்த்தவிசேஷம் கண்ணில் பட்டது. ஸ்ரீகூரத்தாழ்வான் குமாரர் என்னும் பெருமையும், எம்பாரின் சிஷ்யர் ஆனவரும், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு அரிய உரை அருளியவரும் ஆன பராசரபட்டர் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளும் ஸ்ரீரங்கநாதன் என்னும் பெரிய பெருமாள் விஷயமாக ஸ்ரீரங்கராஜஸ்தவம் என்று ஓர் ஒப்பற்ற ஸ்தோத்திர விசேஷம் பாடியிருக்கிறார். அதில் ஸ்ரீமந் நாதமுனிகளைப் பற்றிப் பாடும்பொழுது
நௌமிநாதமுநிம் நாம ஜீமூதம் பக்த்யவக்ரஹே |
வைராக்ய பகவத்தத்வஜ்ஞாந பக்த்யபிவர்ஷகம் ||
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்பொழுது என்ன அர்த்த விசேஷம்? பக்தி, ஞானம், வைராக்கியம் எல்லாம் நிறைந்த ஒரு கார்மேகம் நாதமுனி என்று சொல்கிறார் அவ்வளவுதானே? அந்த மேகமாகிய நாதமுனிகளை வணங்குகிறேன் என்கிறார். ஆனால் பக்த்யவக்ரஹே என்னும் பதத்தில் உள்கருத்தை ஸ்ரீஅண்ணாவப்பங்கார் ஸ்வாமி சுட்டிக்காட்டும் பொழுது நமக்கு வியப்புதான் மிஞ்சுகிறது. பராசரபட்டரின் சுலோகங்கள் பார்க்க எளிதுபோல் தோன்றினாலும் அர்த்தங்கள் உள் நிறைந்து இருக்கும் என்பது புரியவருகிறது.
பக்த்யவக்ரஹே என்பது பக்தியாகிற தீர்த்தத்தினுடைய வர்ஷம் இல்லாத காலத்திலும் என்பது இதன் உட்பொருள் என்று இலக்கண ரீதியாக ஸ்வாமி பிரித்துக்காட்டும் பொழுது ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறார்.
சாதாரணமாக ஈரப்பசையே இல்லாமல் வறண்டு கிடக்கும் காலத்தில் திடீரென்று கார்மேகம் வந்து வர்ஷித்தால் அதன் அருமை அப்பொழுதுதான் நன்கு புரியும். ஆனாலும் பெய்த மழை மறைந்துபோகவும் கூடும். பெய்ததா என்று அயிர்க்கும் வண்ணமும் ஆகும். அப்படியெல்லாம் ஆகாமல் நின்று பெய்து நிலம் தோய்ந்த மழை போன்று ஸ்ரீமந் நாதமுனிகளாகிய மேகம் பெய்த மாமழை தொடர்ந்து தக்க ஆசாரியர்களால் விடாமல் பேணிக் காத்துப் பெரும் ஏரியாக அனைவருக்கும், இன்றுமட்டும் காலம் காலமாக உதவும் நிலைக்கு வந்தது என்றால் அப்பொழுதுதான் அந்த மேகம் அது பெய்தபொழுது பக்தியாகிற ஈரப்பசை இல்லாமல் இருந்த நிலை எல்லாம் அர்த்தம் கனக்கிறது.
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? வைராக்கியம் என்பதும், யதார்த்தமான ஜ்ஞாநம் என்பதும் கூடவே இல்லாமல் இருந்தால் அது பக்திக்கே பெரும் வருத்தம் ஆகும் என்பதைத்தான் ஸ்ரீமத்பாகவதம் தான் தொடங்கும் போதே காட்டுகிறது.
எனவே ஸ்ரீமந் நாதமுனிகளாகிய ஜீமூதம் – மேகம், அன்று பெய்தபொழுதே பக்தியோடு கூட நிறைந்த யதார்த்தமான பகவத் தத்வ ஜ்ஞாநம், பகவானைத் தவிர இதர விஷயங்களில் கடும் வைராக்கியம் என்று பூரணமாகக் குறைவின்றி வர்ஷித்த கார்முகில் என்கிறார் பராசர பட்டர் என்பது ஸ்ரீஅண்ணாவப்பங்கார் காட்டும் அர்த்த விசேஷம்.
*
* ஶ்ரீரங்கம் வி. மோகனரங்கன்